Ads (728x90)

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவைச் சேர்ந்த செல்வி இந்துகாதேவி கணேஸ்  தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில்  வாழ்ந்து வரும் இந்துகாதேவி கணேஸ் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் லாகூரில்  இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 55 கிலோகிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், நாட்டுக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget