Ads (728x90)

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள்  நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்களால் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை உறுதி செய்யும் வகையில் வெளிவிவகார அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைய எரிப்பொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்  இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கடந்த 15 ஆம் திகதி மெய் நிகர் ஊடாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget