இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சுரேன் குருசாமி ஆகியோர் நேற்று இந்திய தூதரகத்திற்கு சென்று ஆவணத்தை கையளித்துள்ளனர்.
இனப்பிரச்சனைக்கு தீர்வாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, சமஷ்டி அடிப்படையிலான இறுதி தீர்வை அடைய உதவும்படியும், அதுவரை இடைக்கால ஏற்பாடாக 13 வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் இந்த ஆவணத்தை தயாரித்துள்ளன.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.கே.சிறிகாந்தா ஆகியோர் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
Post a Comment