கல்வி சீர்சிருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை அந்த பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று காலை அறிவித்தது. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
ஊடகங்கள் மூலம் இது குறித்து அறிந்து கொண்ட கலாநிதி சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சிற்கு சென்று தனது அலுவலகத்தையும், அங்கிருந்த பொருட்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
பதவி நீக்கம் என்பது தனக்கு பெரிய விடயமல்ல எனவும், தமக்கு தொழில் ஒன்று இருப்பதால், சட்டத்தரணியான தான் மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விவசாயத்துறையும், கொள்கை ரீதியிலான தீர்மானங்களும் தோல்வியடைந்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் கூறியதால் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும் எனவும் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
Post a Comment