ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசின் முதுகெலும்பாக அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் இருக்க வேண்டும். அவ்வாறானவர்கள் அரசையும், அதன் கொள்கையையும் பொது வெளியில் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? இது அவர்களின் ஒழுக்கமின்மையையும், தகுதியின்மையையும் எடுத்துக் காட்டுகின்றது.
அப்படியானவர்களின் பதவியைப் பறிக்க ஜனாதிபதியான எனக்கு முழு அதிகாரம் உண்டு. இது தொடர்பில் அரச கட்சிகளுடன் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் ஓரணியில் செயற்பட்டால்தான் அரசு முன்னோக்கிப் பயணிக்கும், நாடும் வளம் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment