Ads (728x90)

எதிர்வரும் திங்கள் முதல் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளையும் சாதாரண நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்து வந்தநிலையில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தன. அத்துடன் பாடசாலையின் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும் ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் பெருமளவான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. புதிய நடைமுறைக்கமைய விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் திங்கள் முதல் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget