Ads (728x90)

இக்கட்டான இன்றைய காலத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு இன்னல்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, தேர்தல் வருமா என சிலர் கேட்கிறார்கள். வாக்குகளையோ அல்லது தேர்தலையோ எதிர்பார்த்து நாங்கள் இந்தத் திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் கஷ்டங்கள் குறித்து தெளிவான புரிதலை அரசாங்கம் கொண்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவாக இல்லை. அதையும் விமர்சிக்கிறார்கள். நாம் கொடுப்பது அவர்களுக்குப் பிடிக்காது. ஆனால் அவர்களும் அவ்வாறு செய்வதில்லை. 

பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதை உணர்ந்ததால் ஓர் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம்.

உலகம் முழுவதையும் மாற்றிய கொவிட் தொற்று நோயின் தாக்கத்தை ஒரே இரவில் அகற்ற முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget