Ads (728x90)

உணவு மற்றும் எரிபொருளுக்காக இலங்கைக்கு மேலும் 02 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவுவதற்கும், நாணய பரிமாற்றம் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக Reuters செய்தியில் தெரிவித்துள்ளது.

கோதுமை மா, தானிய வகைகள், சீனி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இலங்கையின் புதிய கடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவினால் ஏற்கனவே 1.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget