இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சில கோரிக்கைகள் அடங்கிய பதாகையை ஏந்தி பதிலளித்துள்ளதை காணக்கூடியதாக இருந்தது.
மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளாவன:
01. ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும்.
02. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
03. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரம், கல்வி போன்றவை) மறுசீரமைப்பதற்காக 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.
04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05. 06 மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.
இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment