இதன் அடிப்படையில் எதிர்வரும் 02 வார காலத்திற்கு மோட்டார் சைக்கிள்களுக்கு 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவிற்கும் மற்றும் கார், வேன், ஜீப் உள்ளிட்ட ஏனைய வாகனங்களுக்கு 5,000 ரூபாவிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் பஸ் உள்ளிட்ட ஏனைய டீசல் வாகனங்களுக்கு பொருந்தாது எனவும் வாகனங்கள் தொடர்பான தகவல்களை உளளடக்கிய ஆவணமொன்று பேணப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ், பாதுகாப்பு பிரிவு, அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இதனை கண்காணிக்கவுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment