நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி விலக்கப்பட்ட பிரதமர் இம்ரான் கானின் இடத்திற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கானின் கூட்டணி கட்சிகள் கைவிட்ட நிலையிலேயே அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததோடு தனது பதவியை இழந்தார்.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 172 பேர் வாக்களித்தால் பிரேரணை நிறைவேறும் நிலையில், 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷரீபின் இளைய சகோதரராவார்.
அரசியல் அனுபவம் பெற்ற ஷெபாஸ் ஷெரீப் இதற்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக 03 முறை பதவி வகித்துள்ளார் என்பதுடன், பஞ்சாப் மாகாணத்தில் நீண்ட காலம் பதவி வகித்தவராக தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.

Post a Comment