Ads (728x90)

பிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் இலங்கையின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது.

இதற்கமைய பிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை CC நிலையிலிருந்து C நிலைக்கு தரம் குறைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடனை மீள செலுத்தும் திட்டம் வரையப்படும் வரையில், வெளிநாட்டு கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியுள்ளமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை இலங்கை தற்காலிமாக இடைநிறுத்துவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget