Ads (728x90)


நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே போஷாக்கான உணவை உட்‍கொள்வதாகவும், மக்களின் வருமானத்தில் 75 சதவீதத்ததை உணவுக்காக செலவிடப்படுவதாகவும்  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் போஷாக்கின்மை நிலைமை, தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்துள்ளது. இந்நிலைமையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இக்குழு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்றத்தில்கூடிய போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget