Ads (728x90)

இன்றிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இந்த விலை குறைப்பு இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் அமுலுக்கு வருகின்றது. 

இதன்படி 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவாலும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலைக்குறைப்பின்படி 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 415 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் என்பவற்றின் விலை 510 ரூபாவாகக் காணப்படுகிறது.

மேலும் மண்ணெண்ணெய்யின் விலை 340 ரூபாவாகவும் , தொழிற்சாலை மண்ணெண்ணெய் விலை 464 ரூபாவாகவும் காணப்படுகிறது.



Post a Comment

Recent News

Recent Posts Widget