Ads (728x90)

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடைந்துள்ளது.  

மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை உடைந்த நிலையில் மூதூர், வெருகல் மற்றும் சேருவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படையினர் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 231 பேரினை இலங்கை விமானப்படையினர் மீட்டுள்ளனர்.  

கங்கை பாலத்திற்கு அருகாமையில் உள்ள முறிஞ்சாறு உடைப்பு எடுத்தன் காரணமாக மூதூர் பயணம் உப்பாறு பாலம் வழியாக போக முடியாமல் தடைப்பட்டுள்ளது.

வெருகல் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. ஈச்சிலம்பற்று வைத்தியசாலை பாதிக்கப்பட்டுள்ளது. கங்குவேலி பாடசாலை மற்றும் முத்துவிநாயகர் விவசாய சம்மேளன கட்டிடம் முமுமையாக நீரில் மூழ்கி உள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget