அதே நேரத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தித்வா புயல் உருவாகி தமிழகத்தை கடுமையாக மிரட்டி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானா வெள்ளகாடாக மாறியது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்வா புயல், சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நவம்பர் 30 அதிகாலை அடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment