தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய (NDRSC) உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க இன்று வெளியிட்டார்.
அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் தயாரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நேற்று மாலை (29) ஆறு மணி வரை இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமை குறித்த உத்தியோகபூர்வ விபரங்கள் பின்வருமாறு உள்ளது.
* அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை: 234 503
* அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை: 833,985.
* உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள்: 159.
* காணாமல் போன நபர்களின் எண்ணிக்கை : 203.
* பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை: 919
* பராமரிப்பு நிலையங்களில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை: 34198.
* பராமரிப்பு நிலையங்களில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை: 122, 822 ஆகும்.
ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும்,பாதுகாப்புச் செயலாளர் ஒப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்ட 1/2025 ஆம் ஆண்டு சுற்றுநிருபத்தின் ஊடாக தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு நிவாரண சேவைகளை வழங்குவதற்கான விலைகள் திருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போதுள்ள அனர்த்தத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதேச செயலாளர்கள் எந்தத் தடையும் இன்றி 50 மில்லியன் ரூபா (50,000,000) வரை கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலர் உணவுப் பொருட்களுக்கான பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு ஏற்றவாறு
உணவுப் பொருட்களை வழங்க முடியும் எனவும் சுற்றுநிருபத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமது பிரதேசத்தில் காணப்படும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான குழுவின் மூலம் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment