Ads (728x90)

நாட்டில் பொது அமைதியின்மையை உருவாக்கக்கூடிய எந்தவொரு தவறான அறிக்கையையும், வதந்தியையும் உருவாக்குதல், வெளியிடுதல், பரப்புதல் அல்லது தொடர்புகொள்வது அவசரகால விதிமுறைகள், சட்ட விதிகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி கடுமையான குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக 57 நிகழ்வுகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரித்து வருகிறது என பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

எனவே பொதுமக்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்த்து அமைதியைப் பேணவும், அதிகாரபூர்வமான மற்றும் உண்மையான தகவல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Post a Comment

Recent News

Recent Posts Widget