Ads (728x90)

அஹமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண தொடரின் 36 ஆவது போட்டியில் நெதர்லாந்து அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியின் சார்பில் சிவம் துபே 66 ஓட்டங்களையும், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லோகன் வன் பீக் 3 விக்கெட்டுக்களையும், ஆர்யன் தத் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து 194 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget