Ads (728x90)

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய விபரம் இன்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது.

மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது.

அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபா

கூட்டங்களுக்கு நாளொன்றுக்கான கொடுப்பனவு 2,500 ரூபா 

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான நாளொன்றுக்கான கொடுப்பனவு 2,500 ரூபா 

குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா 

பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget