Ads (728x90)

2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் ஸ்கொட் எட்வார்ட்  அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்ஷா அதிக பட்சம் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ஷகிப்ஷடா பர்கன் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் அர்யன் டற் மற்றும் போல் வான் மிகெறன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget