Ads (728x90)

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு குவைத் அரசாங்கம் இம்முறை 25 தொன் பேரீச்சம் பழங்கள் குவைத்தி பதிவு செய்யப்பட்ட 16 முஸ்லிம் தன்னவர் ஆர்வ நிறுவனங்கள் ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பு குவைத் தூதரகத்தில் வைத்து இந்த பேரீச்சம் பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் குவைத்திலிருந்து இலங்கை வருகை தந்துள்ள அஷ்ஷேக் மன்சூர் ஜப்பார்,  குவைத்தின் இலங்கைக்கான தூதுவர் ஆலயத்தின் சார்ஜ் டி அபயர் மற்றும் பதில் தூதுவர் அப்துல்லாஹ் அல் முஹன்னாஸ் ஆகியோர் இணைந்து 16 நிறுவனங்களின் தலைவர்களுடன் கையளிக்கப்பட்டது.

இவை பள்ளிவாசல்கள் ஊடாக சமூக சேவை இயக்கங்கள் அவர்களது பிரதேச முஸ்லிம்களுக்கு வழங்கி வைக்கப்படும் என இந்த திட்டத்தின் ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget