போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
அயர்லாந்து அணி சார்பில் ஹரி டெக்டர் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் மஹீஸ் தீக்ஸன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
Post a Comment