பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர் கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோர் தலைமையில் புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
இலவசக் கல்வி முறைமைக்குள் எந்தவொரு பிள்ளையும் கைவிடப்படாத வகையில் கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த வேளையில், இவ்வாறான திட்டங்கள் திறமையான மாணவர்களுக்குத் தமது எதிர்காலப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒரு பேருதவியாக அமைகின்றன என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.மகாத்மா காந்தியின் பெயரால் வழங்கப்படும் இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது, அவரது வாழ்க்கையிலிருந்து நாம் பெற வேண்டிய முன்மாதிரிகளை மீண்டும் எமக்கு நினைவூட்டுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment