Ads (728x90)

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹ்டாய்க் அவர்களால் இந்த அரிசி தொகுதி நேற்று வர்த்தகம், வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

தித்வா சூறாவளியின் பாதிப்பினால் நாட்டின் 20% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிதி உதவிகளுக்கு மேலதிகமாக மியன்மார் அரசாங்கம் இந்த 500 மெற்றிக் தொன் அரிசி அன்பளிப்புச் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget