நேற்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்த பிரதிநிதிகள் குழுவை தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.
இவர்கள் இன்று முற்பகல் கம்பளை பகுதிக்கு களவிஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்திற்குப் பிறகு இலங்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

Post a Comment