Ads (728x90)

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள்  விநியோகிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 3,900 மற்றும் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. 

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், சில இடங்களில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. 

தற்போதைய நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், போதுமான கையிருப்பை பேணுவதற்காக புதிய கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget