Ads (728x90)

ஜப்பான் நாட்டில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

இந்தநிலையில் ஜப்பானின் நாடாளுமன்றக் கீழவையில் உள்ள 465 இடங்களில், பிரதமர் சனா டகாயிச்சியின் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மாத்திரம் தனியாக 316 இடங்களை வென்று, ஆட்சியமைப்பதற்குத் தேவையான 233 என்ற பெரும்பான்மை பலத்தை விட அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன் ஊடாக ஜப்பான் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை சனா டகாயிச்சியின் கூட்டணி பெற்றுள்ளது.

இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சனே டக்காச்சி பெற்றுள்ளார்

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி கடந்த அக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. 

பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்தார். 

வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டக்காச்சி உறுதியளித்தார். 

இதை அடுத்து ஜப்பானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டக்காச்சி பிறப்பித்தார். இந்நிலையில் பெப்ரவரி 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. 

இந்தத் தேர்தலில் ஆளும் LDP கட்சிக்கு பெரும்பான்மை (352/465) வெற்றி கிடைத்துள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget