Ads (728x90)

வலி.வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு பகுதியை எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சரும், யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தற்போது பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வட மாகாணத்தில் மக்களுடைய காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்புதரப்பினரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம்.

வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget