இந்நிலையில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 7 நாட்களுக்கு இலவச விசா நீடிப்பு வழங்கிள்ளது.
விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, தங்களது விசா காலம் முடிவடைவதற்குள் இலங்கையிலிருந்து வெளியேற முடியாத பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலையை தவிர்க்க இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் அல்லது மத்திய கிழக்கு ஊடாக ஏனைய நாடுகளுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னர் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Post a Comment