Ads (728x90)

இந்திய பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் பயன்படுத்தி ஈரானின் போர் கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் போர்க் கப்பல் ஒன்றை நீரில் மூழ்கிக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஐரிஸ் டேனா” என அழைக்கப்படும் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று நேற்று அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

அதிகாலை வேளையில் குறித்த கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கைக்கு அமைய, இலங்கை கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

விபத்து நிகழும் போது அந்தக் கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 32 பேர் இலங்கை கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூழ்கிய கப்பலில் இருந்த சுமார் 140 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவரவில்லை எனவும், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget