கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
மார்கோ ஜான்சன் 54 ஓட்டங்களையும், இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீசிய ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கொன்சி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
டிம் சீபர்ட் 58 ஓட்டங்களையும், பின் ஆலன் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

Post a Comment