Ads (728x90)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றும் பல அரபு நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்தியுள்ள நேரடித் தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்த நாடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை தனது ஆதரவைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஆதரவாக நின்றதற்காக ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 

இந்த உரையாடல் குறித்து ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

"ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன். அனைத்து வகையான வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் கண்டிப்பதோடு, இலங்கையின் ஒருமைப்பாட்டை அவருக்கு உறுதிப்படுத்தினேன். இலங்கை உறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் நிற்பதுடன், எவ்வகையிலும் உதவத் தயாராக உள்ளது."என பதிவிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget