Ads (728x90)

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர். 

எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சு மறுத்திருந்தது. 

இந்நிலையில் அயதுல்லா கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வௌியிட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் அறிவித்திருந்தது. 

ஈரானில் 40 நாட்கள் துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இத்துடன் 7 நாட்களுக்கு அங்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget