சோற்றுக் கற்றாழையை வெட்டி, வெந்தயத்தை அதன் வெள்ளைப் பகுதியில் தூவி, மூடி வையுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை எடுத்து, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் முடி கருகருவென்று வளரும்.
தேங்காயை நன்றாக அரைத்து, பால் எடுத்து, கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.
பொடுகை போக்க வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு தொல்லை குறையும்.
தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.
வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். நல்ல பலன் தரும்.
Post a Comment