Ads (728x90)

பிஸ்தா பருப்பானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. 

குழந்தைகளுக்கு பிஸ்தா பருப்பினை தினசரி என்ற அளவில் கொடுத்து வந்தால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறப்பானதாகவும், ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும் இருக்கும். மேலும் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

பிஸ்தா இதய நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பிஸ்தா பருப்பை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது கர்ப்பிணிகளின் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் தருகிறது.

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது செல்களுக்கு தேவையான ஒட்சிசனையும் கொடுக்கிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget