புத்தாண்டு காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தமக்குத் தென்படும் போக்குவரத்து விதிமீறல்களை காணெளியாக பதிவு செய்து இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்தல், அதிக வேகம் மற்றும் அபாயகரமான முறையில் முந்திச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment