Ads (728x90)

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பரப்புகளை அளவீடு செய்து, அதன் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக, காணி உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 17 காணி உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர்கள் தமது எல்லைகளைச் சரியாக அடையாளம் காட்டினால், நிலஅளவைத் திணைக்களம் மூலம் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, காணிகள் மிக விரைவில் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கடற்தொழில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget