Ads (728x90)

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், இலங்கையின் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், இந்த விலை அதிகரிப்பின் சுமையை முழுமையாக மக்கள் மீது சுமத்தப்போவதில்லை எனவும், இதற்கான மேலதிக செலவின் கணிசமான பகுதியை அரசாங்க திறைசேரி ஏற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

போர்ச் சூழல் வழமைக்குத் திரும்பியதும், தற்போதுள்ள அதிகப்படியான எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget