இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தம் அநியாயமானது. இதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் முகங்கொடுக்கத் தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
இன்று முதல் பணியைப் பொறுப்பேற்கவுள்ள புதிய வைத்திய அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால், எவ்வித அச்சமும் இன்றி அவர்கள் கடமைக்கு சமூகமளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பின்னரான மருத்துவ நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 புதிய மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், இந்த மருத்துவ நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 பேரும் முதல் முறையாக நியமிக்கப்படுவதால் இதற்கு இடமாற்று சபைக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment