வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல், மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண், அவதானிப்பு (Caution Level) மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதிக சோர்வு ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன் தொடர்ச்சியான உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதீத நிலையில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் அதிக வெயிலில் அலைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளர்.

Post a Comment