Ads (728x90)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்த 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது. 

வியட்நாம் மற்றும் இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத்துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025ஆம் ஆண்டு வியட்நாமிற்கு மேற்கொண்ட அரச பயணத்தைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதியின் அழைப்பையேற்று வியட்நாம் ஜனாதிபதியின் இந்த அரச விஜயம் இடம்பெற்றுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget