Ads (728x90)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் அவர்களை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பொலிஸ் குதிரைப்படைப் பிரிவினரின் மரியாதையுடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி டோ லாமுக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது. இதன் போது முழுமையான அரச கௌரவத்துடன் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வியட்நாம் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.

இரு நாட்டுத் தலைவர்களும் முப்படையினரின் கௌரவ மரியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர், வியட்நாம் - இலங்கை அரச பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தலைவர்கள் இருவரும் உத்தியோகபூர்வ புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget