இவற்றை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இந்த 134 கெப் ரக வாகனங்களும் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் வட மாகாணத்தில் பொலிஸாரின் நடமாடும் கண்காணிப்புப் பணிகள் மற்றும் செயற்பாட்டுத் திறன்களைப் பலப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த அன்பளிப்பைப் பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.


Post a Comment