Ads (728x90)

பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோது, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டார். 

பின்னர், சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் தலங்கம பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, 500,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget