பேரினப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், கையிருப்புகளை அதிகரிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் அண்மையில் முன்னெடுத்த நடவடிக்கைகள், நாட்டு மக்கள், முதலீட்டாளர்கள், ஏனைய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுப் பிரதானி இவான் பபஜோர்ஜு தெரிவித்துள்ளார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்புகளைப் பாராட்டியுள்ள அவர், கொள்கைகளின் ஸ்திரத்தன்மையை பேணுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை பெற்றுக்கொண்ட வெற்றிகளை தொடர்ந்தும் பேண வேண்டுமாயின் ஒரே கொள்கையில் நிலையாகப் பயணிப்பதும், மாறுபடும் நிலைமைகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை இசைவாக்கமடைய இடமளிப்பதும் மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment