கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா, காவல்துறையினரால் இல்லாமல் ஆக்கப்படுவதைத் தடுப்பதற்காகவும், தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றாக வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், புலனாய்வு நடவடிக்கைகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கும் உதவுவதாகக் கூறி கையூட்டல் கோரப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு டுபாயில் வைத்து, ஹரக் கட்டாவின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் சந்தேகநபர்கள் கையூட்டல் கோரியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களினால் சந்தேகநபரின் மனைவியிடமிருந்து ஆரம்பத்தில் 50 கோடி ரூபா கோரப்பட்டுள்ளது. பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டு, அதில் முற்பணமாக 12 கோடி ரூபா பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
.jpeg)
Post a Comment