Ads (728x90)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 7 கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட ஐவர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து சுமார் 6 கிலோகிராம் ஹஷீஷ் மற்றும் 11 கிலோகிராம் குஷ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 6 கிலோகிராம் 110 கிராம் ஹசீஸ் போதைப்பொருளையும், 11 கிலோகிராம் 062 கிராம் குஷ் போதைப்பொருளையும் 15 கண்ணாடிப் போத்தல்களுக்குள் அடைத்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள இலங்கை தீர்வையற்ற வர்த்தக வளாகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பொலித்தீன் பைகளில் மறைத்து எடுத்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட உள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget