Ads (728x90)

எல்நினோ மற்றும் லாநினா ஆகிய காலநிலை மாற்றங்கள் காரணமாக, இலங்கையின் கடல் மற்றும் நீர்நில வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இலங்கையின் காலநிலைக்கான நாடாளுமன்ற ஒன்றியம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட குழுக்கூட்டத்தின் போதே இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மாறிவரும் காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில், நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

உலகளாவிய காலநிலை மாற்றங்களால் இலங்கையின் அரிய வகை நீர், நில வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் உயிர்த்தொகுதிகள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கான கொள்கை ரீதியான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

எல்நினோ மற்றும் லாநினா என்பன பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் காற்று சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இயற்கை காலநிலை நிகழ்வுகள் ஆகும். 

Post a Comment

Recent News

Recent Posts Widget