Ads (728x90)

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே 12.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் சந்தியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் வௌ்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். 

முன்னதாக 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தாங்கிய சவூதி அரேபியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாக கடந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்த நிலையில் ஜே.டி வான்ஸ் இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டுள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget